மண்ணச்சநல்லூர் மாதவன் வெட்டி படுகொலை !
மண்ணச்சநல்லூர் மாதவன் மீது மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் ஏராளமான கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது முட்டை ரவி கூட்டாளியாக கருதப்பட்டு வந்த நிலையில் நீண்ட நாட்களாக குண்டர் சட்டத்தில் இந்நிலையில் நேற்று இரவு திருவானைக்காவல் சன்னதி வீதி பகுதியில் உள்ள தோப்பில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளதாக கூறப்படுகிறது அப்பொழுது இவரது தலையை மட்டும் பல இடங்களில் வெட்டி தலையை சிதைத்துள்ளனர் கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர் சம்பவ இடத்திற்கு காவல்துறை துணை ஆணையர் அன்பு மற்றும் உதவி ஆணையர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது இன்று நடந்த கதை சரி ஃபிளாஷ் பேக்கை பார்ப்போமா…இருபது ஆண்டுகளுக்கு முன் திருச்சியின் பிரபல ரௌடி சேட்டுவின் தலையை அறுத்து, கைகளைத் துண்டித்துக் கொடூரமாகக் கொன்றுபோட்டார்கள் ‘முட்டை’ ரவி கோஷ்டியினர். அந்தக் கொலைக்கு சாட்சியாக இருந்த சேட்டுவின் அண்ணன் அகஸ்டினையும் அப்போது ஒரு கும்பல் வெட்டி, உயிரைப் பறித்திருக்கிறது.
கொஞ்சம் ஃபிளாஷ் பேக்… திருச்சியின் ரௌடிகள் பட்டியலில் மணிபாரதி, ‘முட்டை’ ரவி, சேட்டு ஆகியோர் மிக முக்கிய மானவர்கள். இவர்கள் மூவருமே ஆரம்பகாலத்தில் அகஸ்டின் ‘பாச’றையில் இருந்தவர்கள்தான். வெவ்வேறு கால கட்டங்களில் பிரிவு ஏற்பட்டு, தனித்தனிக் கோஷ்டிக்கு ‘ராஜா’வானார்கள். இதையடுத்து மூன்று கோஷ்டிகளும் அடிக்கடி வெட்டு, குத்து என்று இறங்கி, திருச்சிவாசிகளுக்கு திகிலூட்ட ஆரம்பித்தன ‘முட்டை’ ரவி, ஒருகட்டத்தில் சேட்டுவின் தம்பி ‘குட்டை’ ஜேம்ஸை கொன்றுபோட… இதையடுத்து, சேட்டுவுக்கும் ‘முட்டை’ ரவிக்கும் தீராத பகை பற்றிக்கொண்டது இதெல்லாம் 2004ம் ஆண்டு வாக்கில் இதுதொடர்பாக, ‘முட்டை’ ரவி மற்றும் அவனது கூட்டாளிகளைக் கைது செய்த போலீஸார், அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர் அதில் ஒருவன் தான் மண்ணச்சநல்லூர் மாதவன்.
நாகமங்கலத்தில் வசித்துவந்த அகஸ்டினுக்கு கள்ளச் சாராயம்தான் தொழில்.’கடந்த 2004ம் இரவு ஒன்பதரை மணியளவில் அகஸ்டின், தன் கூட்டாளியான குழந்தைராஜுவுடன் மொபட் வண்டியில் ஆலம்பட்டிபுதூர் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல், அரிவாள்களால் இருவரையும் வெட்ட… குழந்தைராஜு தப்பிவிட்டார். அகஸ்டின் கொல்லப்பட்டார்’ மறுநாள் காலையில் தான் போலீஸுக்கு இந்த செய்தி கிடைத்தது ! அதேபோல தற்பொழுது தலையைத்துண்டித்து மாதவன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். விடாது கருப்பு என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.