மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பு கொடுங்கள். திருச்சியில் திகில் போஸ்டர் !

0

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது. குறிப்பாக, திருச்சி எம்.பி., தொகுதியை பிடிப்பதில், தி.மு.க., கூட்டணிக்குள்ளேயே கடும் போட்டி உள்ளது. அதேபோல், தற்போது காங்கிரஸ் வசம் உள்ள தொகுதியில், அறந்தாங்கியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் எம்.பி.,யாக உள்ளார்.

தி.மு.க., கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்படுமா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்திருக்கும் நிலையில் அவர் நம்பிக்கையுடன் மீண்டும் இங்கு போட்டியிட தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மதிமுகவும் இந்த தொகுதியைக் கேட்டு அடம்பிடித்துக்கொண்டு இருக்கிறது முதல்முறையாக தனது மகனை இங்கிருந்து அனுப்ப வைகோ துடித்துக்கொண்டு இருக்கிறார்.

logo right

அதேபோல், கடந்தமுறை திருச்சி தொகுதியில் போட்டியிட, தனது தந்தையுடன் பழகிய காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மூலம் பகீரத முயற்சிகள் செய்த, காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோசப் லுாயிஸ், இம்முறையும் திருச்சியில் போட்டியிட விரும்புகிறார்.

திருச்சியில் பிரபல தொழிலதிபரான ஜோசப்லுாயிஸ் தந்தை அடைக்கலராஜ், காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த, 1984ம் ஆண்டு முதல், 1998ம் ஆண்டு வரை, தொடர்ந்து நான்கு முறை எம்.பி.,யாக இருந்தவர். ஆகையால், இம்முறை ஜோசப் லுாயிசுக்கு திருச்சியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும், அக்கட்சியினர் தபால் எழுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, திருச்சி மாநகர் முழுவதும், மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று, ஜோசப் லுாயிசுக்கு ஆதரவாக, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஏற்கனவே, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, வரவில்லை என்ற குற்றச்சாட்டுள்ள திருநாவுக்கரசருக்கு எதிராக, காங்கிரஸ், மற்றும் தி.மு.க.,வினர் உள்ள நிலையில், தற்போது வெளியூர்காரர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து, தற்போது காங்கிரஸ் கட்சியினரே களம் இறங்கி உள்ளது, அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.