மதில்மேல் பூனையாக மதிமுக !
என்ன மஹா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழு அவசரக் கூட்டத்தை நாளைக்கு தலைமைக் கழகம் கூட்டியிருக்கு.
ஆமாம் தலைவரே நானும் கேள்விப்பட்டேன் ஆனா எனக்கு ஒண்ணும் புரியல நீங்கள் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க, மொதல்ல அறிக்கையைப்பாரு உனக்கே புரியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நாளை (07.03.2024 வியாழன்) காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம், ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் ஆகியோர் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதுல என்ன தலைவா சூசகம் இருக்கு இருக்கு
மஹா இருக்கு நான் எனக்கு தெரிந்த சோர்ஸ்ல விசாரிச்சேன் அந்த கடிதத்தை நல்லா உத்து பாருங்க உங்களுக்கு தெரியும்னுட்டாங்க நானும் உத்து பார்த்தேன் ‘தாயக’ த்தில்னு கொட்டேஷன் குள்ள போட்டிருக்காங்க தாயகம்னா யாரு அம்மா அம்மானா
ஓ நீங்க அப்படி வர்றீங்களா
நான் வரல அவங்க கட்சிக்காரங்கதான் சொல்றாங்க, கடந்தமுறையே ஒரே ஒரு சீட்டு கொடுத்து அசிங்கப்படுத்தினாங்க இந்தமுறையும் அப்படியேனா நம்மை அவங்க ஒரு பொருட்டாவே மதிக்கல அப்படினு பொங்கிட்டாங்களாம் மொத்தம் உள்ள 69 மாவட்டச்செயலாளர்கள்ல 59 பேர் திமுக கூட்டணி வேண்டாம்னு சொல்றாங்களாம்
அதனால தலைவரே அதிமுக கூட்டணிதான்னு சொல்றீங்களா நீங்க சொல்றதும் கரெக்ட்தான் இப்பொழுதைக்கு அவங்களுக்கு உள்ள ஆப்ஷன் அதுமட்டும்தானே
மஹா நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காதே பாஜகனு ஒரு ஆப்ஷன் இருக்கு ஏன் தேர்தலேயே போட்டியில்லைனு கூட சொல்லாம் இத்தனை நாள் பொறுத்த உனக்கு நாளை ஒருநாள் பொறுக்க முடியாதா
அதுவும் சரிதான் நீங்க உங்களுக்கு பிடிச்ச பங்குச்சந்தையை பாருங்க அது முடியப்போகுது
நானே அவங்களுக்கு பங்கு இல்லைனு கவலையில இருக்கேன் நீ என்னடானா பங்கு சந்தைனுகிட்டு சரி சரி நாளை நல்ல தகவலோட பார்ப்போம்.