மனம் திறந்த கிருஷ்ணசாமி மலரும் கூட்டணி !!
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்த புதிய தமிழகம் கட்சியின் உயர்மட் டக்குழு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் அந்தக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நிருபர்களிடம் கூறியதாவது…
புதிய தமிழகம் கட்சி தொடங்கியதில் இருந்து பலமுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டும் வெற்றிபெற முடியவில்லை. இந்த முறை வெற்றியை மட்டுமே நோக்கமாக கொண்டு, வலுவான கூட்டணியில் இடம் பெற கட்சியின் உயர்மட்டக் குழு எனக்கு அதிகாரம் அளித்துள்ளது. எண்ணிக்கை மற்றும் கொள்கை அடிப்படையில் வெற்றிபெற விரும்புகிறோம்.
2 அல்லது 3 நாடாளுமன்ற தொகுதிகளை கூட்டணிக்கு கேட்போம். நாடாளுமன்றத்திலும், ராஜ்யசபாவிலும் இடம் வேண்டும். அதற்கு தகுந்தபடி கூட்டணி முடிவெடுப்போம் மோடி, ஸ்டாலின், பழனிசாமி என்று யார் நல்லது செய்தாலும் அதை பாராட்டியுள்ளோம். பகை உணர்வோடும், எதிரி தன்மையோடும் எந்த கட்சியையும் எதிர்க்கவில்லை என்றவர் 2019ம் ஆண்டு அதிமுக தலைமையில்தான் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது.
இப்போது அந்தகட்சியே விலகி சென்றுவிட்டபிறகு அந்த கூட்டணியின் நிலை கேள்விக்குறி தான். அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் அமைவதற்கான காலம் கடந்துவிட்டது. அது நடப்பதற்காண சாத்தியம் எனத் தெரிய வில்லை. லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிருத்துவது இந்தியாவில் இதற்கு முன் நடைமுறையில் இல்லை.
கோவை வரும் பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு வந்தால், வாய்ப்பிருந்தால் சந்திப்பேன். தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியலில் இருந்து வெளியேறும் கோரிக்கை குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவோம். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதுடன் உறக்கத்துக்கு சென்று விட்டார். அவர்கள் எழுந்தவுடன் அது தொடர்பாக பேசலாம் இவ்வாறு அவர் கூறினார்.