மனு மாலை ! ஒருவருடம் ஆச்சு ஒண்ணும் நடக்கல…
ஒரு வருடமாக கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் மனுக்களின் ஒப்புகை சீட்டுகளை மாலையாக போட்டுக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயி.
வேலூர் மாவட்டம் ,கே வி குப்பம் ,பி.என்.பாளையம் ஊராட்சி,குக்கலாப்பள்ளி பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தன் பகுதியில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் இதை நான் ஒரு வருடமாக மனுக்களை அழைத்தும் தபால் மூலமாக மனுக்களை அனுப்பியும் உள்ளேன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்கள். என்று கூறி நேற்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த ஒப்புகை சீட்டுக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மாலையாக அணிவித்து வந்தார்.
இனியாவது எங்கள் பகுதியில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்ற வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.