மரியாதையா ! வலையா ?பத்ம விருதுகள்…
கலை அறிவியல் இலக்கியம் மருத்துவம் சமூக சேவை உட்பட பல துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி அவர்களை கவுரவிக்கிறது. 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு நேற்று இரவு வெளியிட்டது. இதில் 5 பத்ம விபூஷண் 17 பதம பூஷண், 110 பத்மஸ்ரீ என 132 விருதுகள் அறிவிக்கப்பட்டன.
பத்ம பூஷண் விருதானது தேமுதிக நிறுவனரும் மறைந்த நடிகருமான விஜயகாந்த், தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் மறைந்த பாத்திமா பீவி, பழம்பெரும் இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, உத்திரப்பிரதேச முன்னாள் ஆளுநர் ராம் நாயக், முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால், பாப் பாடகி உஷா உதுப், தொழிலதிபர் சீதாராம் உட்பட 17 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருந்தானது தமிழகத்தை சேர்ந்த வள்ளி கும்மி நாட்டிய குரு பத்திரப்பன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கல்வியாளர் ஜோ டி கு ரூஸ், டாக்டர் ஜி. நாச்சியார்,நாதஸ்வர கலைஞர் சேஷம்பட்டி டி சிவலிங்கம், கர்நாடகாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா உட்பட 110 பேருக்கு வழங்கப்படும்.
மேலே இருக்கும் பட்டியலை பூதக்கண்ணாடிக்கொண்டு உற்றுப்பாருங்கள் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள் என்னப்பா எதைச்செய்தாலும் சர்ச்சையை கிளப்பினா எப்படிப்பா அட்சி செய்வது என்னமோ போங்க….