மலேசியாவின் புதிய மன்னரானர் இப்ராஹிம் இஸ்கந்தார் !!

0

மலேசியாவின் புதிய மன்னராக இப்ராஹிம் இஸ்கந்தார் நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13 மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில், மலேசியாவுக்கான மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

logo right

இந்நிலையில் ஜோஹர் மாகாணத்தின் சுல்தானாக பொறுப்பு வகித்துவந்த இப்ராஹிம் இஸ்கந்தார், தற்போது மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அவருக்கு முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மலேசியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இப்ராஹிம் இஸ்கந்தார் திகழ்கிறார். அவரது அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 5.7 பில்லியன் டாலர் (ரூபாய் 47,300 கோடி) ஆகும். ஆனால், அவரது உண்மையான சொத்து மதிப்பு இதை விட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.