மஹா சிவராத்திரி போக்குவரத்து மாற்றம்…
திருவானைக்காவல்,அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலானது பஞ்ச பூதத்தலங்களில் அப்பூஸ்தலமாக ( நீர்ஸ்த்தலமாக) சிறப்பு பெற்றது. இத்திருக்கோயிலில் மகா சிவராத்திரியன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் பக்தி சொற்பொழிவு,நாட்டிய நிகழ்ச்சிகள்,இசை நிகழ்ச்சிகள்,கிராமப்புற கலை நிகழ்ச்சிகள்,பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு பெரிய அளவில் பந்தல் போடப்பட்டு வருகிறது.மேலும் ஆ ங்காங்கே தூரத்தில் இருப்பவர்களுக்கு தெரியும் வண்ணம் அகன்ற திரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அனைத்து கோபுரங்களிலும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்படுள்ளது. பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் க்யூ வரிசை கள் அமைக்கபட்டுள்ளன. வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அவ்வப்போது அமர்ந்து செல்லவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு குடிநீர் வசதி இரவு நேரத்தில் பால் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் மேற்கு வாசல் கோபுரத்தில் வாகனம் நுழைவதற்கு உரிய வசதி இல்லாமல் கார் ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளகின்றனர்.இது தொடர்பாக அவ்வப்போது பத்திரிக்கை செய்தியும் வந்துள்ளது.
எனவே இந்த இடர்பாடுகளை களையும் பொருட்டு திருக்கோயில் தெற்கு வாசலில் சுமார் 2ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. எனவே கார் மற்றும் வேன்களில் வரும் பக்தர்கள் மேற்கு வாசலுக்கு பதிலாக கும்பகோணத்தான் சாலையிலிருந்து தெற்கு வாசல் வரும் வழியிலுள்ள வாகனம் நிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மற்றும் உபயதாரர்களுக்கு இடை நிறுத்த தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் நடத்துவதற்கு 1.3.24 அன்று திருவரங்கம் கோட்டாட்சியர் அவர்களால் , அனைத்து துறையிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வருவாய் துறையினர், காவல் துறை, மாநகராட்சி அலுவலர்கள், தீயணைப்பு துறை, உணவு பாதுகாப்பு துறை, மருத்துவ துறை, போக்கு வரத்து துறை, மின்சார துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வருகின்ற 8ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.