மாசித்திருவிழா திருச்செந்தூரில் நாளை தொடக்கம்…

0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா நாளை (14ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி. 12 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு, அன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில்நடை திறக்கப்படுகிறது.

தொடர்ந்து 1.30க்கு விஸ்வரூப தீபாரா தனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் அதி காலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

logo right

7ம் திருவிழா 20ம் தேதி நடக்கிறது. இதற்காக அன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும். அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 4.30 மணிக்கு உருகு சட்ட சேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். மாசித் திருவிழாவின் 8ம் நாள் திருவிழா அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பா லிக்கிறார். 10ம் நாள் திருவிழா தேரோட் டம், வரும் 23ம் தேதி நடக்கிறது. 11ம் திருவிழாவான 24ம் தேதி தெப்பத்திரு விழாவுடன், விழா நிறைவடைகிறது.

Leave A Reply

Your email address will not be published.