மாநில தலைநகராக்குங்கள் என்றால் தங்ககடத்தல் தலைநகரமாக்கிடுவாங்க போல…
திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமான மூலம் பயணம் செய்து வந்திறங்கிய பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்பொழுது ஒரு ஆண் பையன் தனது ஜீன்ஸ் பேண்டில் தங்கத்தை பேஸ்டுகளாக ஒட்டி கடத்தி வந்தது சோதனையில் தெரியவந்தது.
அவரிடம் இருந்து 390 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்க பேஸ்ட்டுகளாக கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு 24 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியும் விமான நிலையத்தில் தங்கத்தை ஒவ்வொரு விதமாக பொருட்கள் மற்றும் உடலில் காலணி பேண்ட் என பல்வேறு விதமாக தங்கம் கடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.