மார்ச் 31க்குள் முடியுங்க இல்லை என்றால் கணக்கு மூடக்கப்படும் !!
சுகன்யா சம்ரித்தி யோஜனா, இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ், தபால் நிலையங்கள் அல்லது வங்கிகளில் பெண்களுக்கு கணக்குகள் தொடங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் பெண் கல்வி, அவர்களின் திருமணம் போன்ற பணிகளை மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமான வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தைப் பற்றிய பல தகவல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது அவசியம் என்பதுதான் இதன் சிறப்பு. இதற்கான விதிமுறைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ரூபாய் 250 கணக்கில் முதலீடு செய்வது அவசியம். இதில் நீங்கள் செய்யக்கூடிய அதிகபட்ச முதலீடு ரூபாய் 1.5 லட்சம் வரை இருக்கலாம். மார்ச் 31க்கு முன் உங்கள் கணக்கில் நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால், அல்லது உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்றால், அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் உங்கள் கணக்கையும் மூடலாம். இதற்குப் பிறகு, அபராதம் செலுத்திய பின்னரே உங்கள் கணக்கு திறக்கப்படும் பீ கேர் புல்.