மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு இந்தியப்பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…

0

மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சீன ஆதரவாளர் ஆவர். நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

logo right

இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்லிமெண்டில், சிறப்பு கூட்டத்தில் ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையே நடந்த அடிதடி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வேகமாக பரவியது. இதன் காரணமாக அதிபர் முகமது முய்சுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாலத்தீவின் பிரதான எதிர்கட்சியான எம்.டி.பி., எனப்படும் மாலத்தீவு ஜூம்ஹூரி கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, பகையை வளர்த்து , இந்திய பிரதமர் மோடியை அவமதித்து விட்டார். இந்தியாவிடமும், இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.