மாவட்டத்திற்கு ஒரு கருணாநிதி சிலை …கவிஞர் சல்மா கலந்துகொண்ட ரகசியம் !
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் நடந்தது.
திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள கருணாநிதி திருவுருவ சிலையை தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் பொய்யாமொழி தலைமையில், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, முன்னிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கருணாநிதி உருவ சிலையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.|nஇந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர், இந்த விழாவில் நேருவும் மகேஸ்சும் இணைந்து கலந்து கொண்டனர் இருவரும் மாவட்டத்தில் இரு துருவங்களாக செயல்பட்டுக்கொண்டிருப்பது ஊரறிந்த ரகசியம் என்பது தனிக்கதை. அதைவிட கூடுதல் சிறப்பு சென்னையிலேயே இருக்கும் கவிஞர் சல்மா திருச்சிக்கு வந்து இந்தவிழாவில் கலந்து கொண்டதை வைத்து திருச்சி நாடாளுமன்ற தேர்தல் வருதுல்ல அதான் என தொண்டையை செருமியபடி காதைக்கடித்தார் தொண்டர் ஒருவர் சரிதான்.