முசிறி : குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் !
காவிரி குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள், காலி குடங்களுடன் மணமேடு – பவித்திரம் சாலையில் அழகரை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்ப இடத்திற்கு சென்ற தொட்டியம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், அலகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா மற்றும் போலீஸார் சம்பவயிடம் சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விரைவில் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மணமேடு – பவித்திரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.