முசிறி : வீதிக்கு வந்து மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது !!
திருச்சி வடக்கு மாவட்டம் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் புதுக்கோட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட் செயலாளர் இளமதி அசோகன் மீது பெட்ரோல் குண்டு வீசிய பாரதிய ஜனதா நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தினர்.
அப்போது திருச்சி – நாமக்கல் சாலையில் முசிறி கைகாட்டியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முசிறி இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் 20 பேரை கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினர்.