முதலமைச்சர் ஸ்டாலின் பிஜேபியை விமர்சிப்பது வெட்கமான ஒன்று…
திருவண்ணாமலை அம்மணி அம்மன் மடம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தினால் இடித்த சம்பவத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அம்மணி அம்மன் மடம் பெங்களூர் வையாபுரி செட்டியார் அறக்கட்டளை நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இடிக்கப்பட்ட பகுதிகளை இந்து அறநிலையத்துறை மீண்டும் கட்டித்தர வேண்டுமென ஒரு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பொய்யான தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்து வருவதாகவும், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்த சங்கர் , திமுக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாஜகவினரை வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி என கூறி வருவதாகவும், ஆனால் இந்த அம்மணி அம்மன் மடம் இடிப்பு விவகாரத்தில் திமுகவினர் எவ்வளவு பொய்யான தகவல்களை அளித்து மதத்தை இடித்து உள்ளார்கள் என்பதும் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையே செய்தியாளர்களிடம் மாற்றி திரித்துக் கூறி வருகிறார்கள் என்றும் சங்கர் தெரிவித்தார்.
பாஜக நிர்வாகிகள் மீது அவதூறாக பொய் பரப்புவர்கள் திமுகவினர் எனவும் பொய்யான தகவல்களை கூறி 21.5 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியான ஏரி நிலத்தை தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்கள் வேறொரு பெயரில் நிலம் உள்ளதாக கூறி மோசடியாக தனது கல்லூரிக்கு நிலத்தை பதிவு செய்து அவரிடமிருந்து தான் நிலத்தை பெற்றுள்ளதாக வேலு அவர்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்து உள்ளார் என சங்கர் குற்றம் சாட்டினார்.
பொய்யான தகவலை பரப்புவதற்கும், போலி பத்திரத்தை உருவாக்கி பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பதற்கு ஒட்டுமொத்த பொய்யான யுனிவர்சிட்டி வைத்திருப்பது திமுகவினர் தான் எனவும் இதற்கு முதலமைச்சரின் பதில் என்ன என்று சங்கர் கேள்வி எழுப்பினார். திமுக அரசு ஆதாரம் இல்லாமல் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களையோ, தலைவர்களையோ அராஜகப் போக்கில் அடிபணிய வைக்க நினைத்தால் நாங்கள் நீதிமன்றத்தில் உரிய நீதியை பெறுவோம் என கூறிய சங்கர் , யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சட்டத்தைப் பற்றியும் கூட கவலைப்படாமல் திமுகவினர் பொது சொத்துக்களை கொள்ளையடித்து வருவதாகவும், இத்தகைய செயல்பாடுகளில் உள்ள மந்திரிகளின் செயல்பாடுகளுக்கு முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் சங்கர் தெரிவித்தார்.
திமுகவில் உள்ள பல மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் உள்ளதாகவும் இதுக்கெல்லாம் பதில் சொல்லாத முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பிஜேபி விமர்சிப்பது வெட்கமான ஒன்றும், பாரதிய ஜனதா கட்சி தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாவின் மீது அவமதிப்பு வழக்கு தொடர போவதாகவும், இந்த விவகாரத்து திருவண்ணாமலை உள்ள திமுக பிரமுகர்கள் பொதுமக்கள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான இடங்களை வைத்துள்ளார்கள் என்பது கூறிய பட்டியல்களை நாங்கள் வெளியிட போறோம் எனவும் சங்கர் தெரிவித்தார்.
குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் என்பவர் பதவி ஏற்றது செல்லாது என வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் , அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியை உடனடியாக அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் ரத்து செய்ய வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்க விட்டால் அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகத்தினரும் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என பாரதிய ஜனதா கட்சியின் ஆலைய மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத்தலைவர் டி. எஸ். சங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.