முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்தது பாஜக !
INDI கூட்டணிதான் பல சுற்றுப்பேச்சு வார்த்தை நடத்தியது இத்தனை கட்சிகள் அத்தனை கட்சிகள் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் எனக்கூறி வந்த நிலையில் காங்கிரஸ் திமுக கூட்டணியால் தமிழகத்திலேயே கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை ஜவ்வாக இழுத்துக்கொண்டு இருக்கிறது பேச்சு வார்த்தை இந்நிலையில் பாஜக பட்டியலையே வெளியிட்டு விட்டது.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் அமித்ஷா போட்டியிடுகிறார்
லக்னோவில் களமிறங்குகிறார் ராஜ்நாத் சிங்
அமேதி தொதியில் கடந்தமுறை ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிரிதி இரானியே மீண்டும் களம் காண்கிறார்.
கூடுதலாக தற்போது மத்திய அமைச்சர்களாக இருக்கும் 34 பேருக்கு வாய்ப்பை வழங்கியிருக்கிறது பாஜக, கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சுரி சுவராஜ் புதுடெல்லியில் போட்டியிடுகிறார், காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி மகன் அனில் ஆண்டனி பத்தனமிட்டா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
கூடுதல் சிறப்பாக 47 பேர் – 50 வயதிற்கு உட்பட்டவர்கள், 28 பேர் பெண்கள் , 27 பேர் பட்டியல் இன வேட்பாளர்கள், 18 பேர் பழங்குடியினத்தவர்கள், 57 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் என பட்டியலின் நீளம் நீள்கிறது இந்நிலையில் இரண்டாம் கட்ட பட்டியலில் தமிழக தொகுதிகள் இடம் பெரும் என்கிறார்கள்.