முன்னோர்களின் ஆசி கிடைக்க எளிமையான வழி !
முன்னோர் வழிபாட்டுக்குரிய அமாவாசை மட்டுமில்லாமல், எந்தநாளிலும் கொடுக்கலாம். எல்லோரும் செய்ய வேண்டிய அடிப்படை தர்மம் இது, மனிதர்களாகப் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய மூதாதையர்களுக்கான திதி, தர்ப்பணம், வழிபாடு உள்ளிட்டவை செய்யாமல் விட்டிருந்தால் ஏற்படக்கூடிய பாவம் பதினாறு அகத்திக் கீரை கட்டு பசுவிற்கு தருவதால் தீரும் என்பது ஐதீகம்.
கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கீரையை வழங்கவும்…
ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே !
எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்பவளே ! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே ! மங்கல வடிவானவளே ! பெருமைக்குரிய காமதேனுவே ! உன்னை வணங்குகிறேன்.என்பதே இதற்கு பொருள்.