மூன்று மடங்கு விலை உயர்வு கண்ணீரில் கட்டுமானர் சங்கம் !!

0

திருச்சியில் அகில இந்திய கட்டுனர் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நெடுஞ் சாலை கான்ட்ராக்டர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரிசங்கு, கட்டுனர் சங்க மாநில செயலாளர் வெங்கடேசன், திருச்சி மைய சேர்மன் சுப்ரமணி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் அய்யப்பன் பேசியதாவது…எம் சாண்ட், ஜல்லி, கிரஷர் டஸ்ட் உட்பட கட்டுமான பொருட்களின் விலை மடங்கு உயர்ந்துள்ளது. 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கட்டுமானங்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்துவிட்டது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

logo right

அரசின் கனவு திட்டங்கள், கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் நிலவுகிறது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், கடுமையான விளைவுகளை கட்டுனர் சங்கத்தினர் சந்தித்து வருகிறோம். எனவே எதிர்காலத்தில் டெண்டர்களை தவிர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத் தில் 2 ஆயிரம் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறன. ஏற்கனவே 50 சதவீத கல்குவாரிகள் மூடப்பட்டு விட்டதால், ஜல்லி, எம் சாண்ட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவற்றின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் தமிழகம் தழுவிய அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட கட்டுனர் சங்கம் முடிவு எடுத் துள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.