மூன்றே ஆண்டுகளில் முத்தாய்ப்பான வருமானம் !
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, இந்தியாவில் பட்டியலிடப்பட்ட இப்பங்குகள் அதன் பங்குதாரர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளித்துள்ளது. எஸ்ஜி மார்ட் லிமிடெட் நிறுவனம் ரூபாய் 6,341.61 கோடி சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது, இப்பங்குகள் வெள்ளிக்கிழமை 2 சதவிகித அப்பர் சர்க்யூட்டில் ரூ.11,371-ல் வர்த்தகத்தை நிறைவு செய்தன. நிறுவனத்தின் பங்கு அதன் புதிய 52 வார உயர் விலையை வெள்ளிக்கிழமை எட்டியது. நிறுவனத்தின் பங்குகள் வெறும் மூன்றே ஆண்டுகளில் சுமார் 12,000 சதவிகிதம் வளமான வருமானத்தை அளித்துள்ளது. ஜனவரி 2021ல் பங்கு விலை ரூபாய் 94ல் இருந்து சந்தையில் நிலவும் தற்போதைய பங்கு விலைக்கு மாறியது. மூன்றாண்டுகளுக்கு முன் ஒருவர் இப்பங்கில் ரூபாய் 1 0,000த்தை ரூபாய் முதலீடு செய்திருந்தால், அது தற்பொழுது 12,27,960 ஆக மாறியிருக்கும். நிறுவனத்தின் தனியான நிதிநிலைகளை பார்க்கும் பொழுது, முக்கிய காரணிகளான இயக்க வருவாய்கள் மற்றும் வரிக்குப் பிந்தைய லாபங்கள் ஆகியவை சமீபத்திய காலாண்டில் கடுமையான நகர்வுகளைக் காட்டின. முந்தைய காலாண்டுடோ அதாவது 23-24 காலாண்டில் ரூபாய் 506 கோடியிலிருந்து 23-24ம் நிதியாண்டின் பொழுது ரூபாய் 748 கோடியாக உயர்ந்தது, அதே காலக்கட்த்தடில் லாபம் ரூபாய் 8 கோடியிலிருந்து ரூபாய் 17 கோடியாக இருமடங்காக உயர்ந்தது. செப்டம்பர் 2023 காலாண்டின்படி சமீபத்திய பங்குதாரர்களாக நிறுவனத்தின் நிறுவனர்கள் 75 சதவீதப் பங்குகளையும், அதனைத் தொடர்ந்து சில்லறை முதலீட்டாளர்கள் மீதமுள்ள 25 சதவீதப்பங்குகளையும் வைத்திருக்கின்றனர். 1985ல் நிறுவப்பட்ட, SG Mart Limited, முன்பு Kintech Renewables Limited என்று அழைக்கப்பட்டது, காற்று மற்றும் சூரிய ஆற்றல் தீர்வுகளை வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது, அத்துடன் பல்வேறு பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான (EPC) திட்டங்களை செயல்படுத்துகிறது. Disclimer : மேலே உள்ள கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது தரகு நிறுவனங்களின் கருத்துக்களே முதலீட்டாளர்கள் உங்கள் ஆலோசகரை ஆலோசிக்கவும்.