மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா !!
மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக்குழு அமைத்துள்ளது.
இதற்கிடையில், இப்படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை த்ரிஷா இன்று நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து நடிகை திரிஷாவுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக நடிகை திரிஷா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ‘ஸ்டாலின்’ படத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது மெகா மாஸ் ஃபேண்டஸி உலகை காட்டும் ‘விஸ்வம்பரா’ படத்தில், சிரஞ்சீவியுடனான மேஜிக் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கலாம்.
இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். 2025ம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10ம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.