யாருடன் கூட்டணி அண்ணியார் ஆலோசனை ?

0

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில்வரும் 7ம்தேதி சென்னை கோயம்பேட்டில் நடக்கும் முதல் கூட்டம் இது. முதலில் கட்சியில் சிலருக்கு பொறுப்புக்கள் மாற்றியமைக்கபடலாம் என்ற தகவல் கசிகிறது.

அதன்பின்னர் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்கிறார்கள்.

logo right

அதிமுக, பாஜக ஆகிய இரண்டு அணிகளும் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க விரும்பும் நிலையில், இதுவரை தேமுதிக தனது நிலையை இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நடைபெறவுள்ள மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கியமான முடிவு எடுக்கப்படும் என அந்தக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

கண்டிப்பாக திமுக கூட்டணிக்குச்செல்ல வாய்ப்பு இல்லை என அடித்துச்சொல்லும் கேப்டனின் சொந்தங்கள் அண்ணியாருக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கொடுத்துவிட்டு அன்றைய கூட்டம் சஸ்பென்ஸோடு முடியும் என்கிறார்கள் நாம் விசாரித்த சோர்ஸ்கள்.

Leave A Reply

Your email address will not be published.