யாருடன் கூட்டணி ? திகு திகு தினகரன்…
எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு அமமுக தலைவர் தினகரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து அவர் பேசியதாவது…
எம்ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம் அதிமுக அவரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா கழகத்தை கட்டிக் காத்து தமிழக முதல்வராக இருந்தார். ஜெயலலிதா முதல்வராக்கப்பட்ட பழனிசாமி ஊழல் முறைகேடுகளால் அதிமுக களவாடப் பட்டுவிட்டது. எம்ஜி.ஆர் உருவாக்கிய சட்டதிட்டங் களை மாற்றி பொதுக்குழு உறுப்பினர்களை மாற்றி பழனிசாமி அதிமுகவை களவாடி வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
அதுசரி யாருடன் கூட்டணி என நிருபர்கள் கேட்க நானும் ஓபிஎஸ்ம் அரசியலில் இணைந்து செயல்படுவோம். ஒரு கட்சி மற்றொரு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை கூட்டணி குறித்த அறிவிப்பை விரைவில் தெரிவிப்பேன் என்றார்.