யெஸ் வங்கி Q3 நிகர லாபம் நான்கு மடங்கு உயர்வு…
தனியார் துறை யெஸ் வங்கி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் நிகர லாபத்தில் 345 சதவிகிதம் உயர்வை அறிவித்தது, ஆனால் மதிப்பீடுகளை தவறவிட்டது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூபாய் 231.5 கோடியாக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூபாய் 52 கோடியாக இருந்தது. ப்ளூம்பெர்க் நடத்திய கருத்துக்கணிப்பு ஆய்வாளர்கள் இந்த காலாண்டில் ரூபாய் 367 கோடி நிகர லாபம் ஈட்டும் எனக்கூறியிருந்தனர்.
வருமானம் அல்லது நிகர வட்டி வருமானம், காலாண்டில் 2.3 சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து ரூபாய் 2,017 கோடியாக உள்ளது. வங்கியின் பிற வருமானம் கடந்த ஆண்டை விட 12 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 1,194.6 கோடியாக உள்ளது. யெஸ் வங்கி Q3 முடிவுகள் முக்கிய சிறப்பம்சங்கள் நிகர லாபம் 345 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 52 கோடியில் இருந்து ரூபாய் 231.5 கோடியாக உயர்ந்தது,
நிகர வட்டி வருமானம் 2.3 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 1,971 கோடியில் இருந்து ரூபாய் 2,017 கோடியாக உயர்ந்துள்ளது.