ராஜா ராஜாதான்… இளையராஜாவின் 1,417வது படம் !
லேகா தியேட்டர்ஸ் தயாரிப்பில் இளையராஜாவின் ஆயிரத்து 417வது படமாக உருவாகியுள்ளது ‘நினைவெல்லாம் நீயடா. சிலந்தி, அருவா, சண்ட, படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரஜின், மனீஷா யாதவ், யுவலட்சுமி, சினாமிகா, ரோஹித், மதுமிதா ஆகியோர் நடித்திருக்றார்கள். படம் குறித்து இயக்குனர் கூறியது…
இந்த படத்தில் முதன்முறையாக இளையராஜாவுடன் பணி யாற்றியுள்ளேன். அவரை அணுகுவதே கடினம். அவருடன் எளிதாக பணியாற்ற முடியாது என்று சொன்னார்கள். ஆனால், அவருடன் இணைந்து பணியாற்றியபோது மிகவும் சவுகரியமாக உணரும்படி எனக்கு இசையமைத்துக் கொடுத்தார். அவர் கொடுத்த ஐந்து பாடல்களும் அற்புதமானவை. அதில் ஒன்றை யுவன் சங்கர்ராஜா பாடியிருக்கிறார்.
இளையராஜா மதுரையில் என் நண்பரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து, இந்த காதல் கதையை உருவாக்கி உள்ளேன். இதில் 70 சதவீதம் உண்மையை 30 சதவீதம் கற்பனை கலந்து கொடுத்திருக் கிறேன். எல்லோரும் பள்ளி பருவத்தை கடந்துதான் வந்திருப் பார்கள். மண்ணுக்குள் போகும் வரை யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயம் முதல் காதல். அதுதான் படத்தின் கரு இவ்வாறு அவர் கூறினார்.
படம் குறித்து காமெடி நடிகை மதுமிதா பேசுகையில், ‘என்னுடைய பிரசவத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை இந்த படப்பி டிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். படப்பிடிப்பு தளஅதிர்வை கேட்டு என் வயிற்றில் உள்ள குழந்தை என்னை எட்டி உதைத்தது மறக்க முடியாத அனுபவம்’ என்றார்.