ராம்லீலா நிகழ்ச்சியில் ஏற்பட்ட சோகம்…
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஒருவித பிரச்சனையும் இன்றி உலகெங்கும் வெகு விமர்ச்சையாக நடைபெற்ற பொழுது ஒரு சோக நிகழ்வும் நிகழ்ந்திருக்கிறது. ஹரியானா மாநிலம் பிவானியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில், ஹனுமான் வேடம் அணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் ஹரிஷ் மேத்தா மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிரிழந்தார்.
இது நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்து மக்கள் அவரை காப்பாற்ற முன்வராத நிலையில், நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காமல் இருப்பதை உணர்ந்து பதறிப்போய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உலகெங்கிலும் விழா கோலகலமாக நடைபெற்ற நிகழ்வில் பகதர்கள் மத்தியில் இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.