லஞ்சபணத்தை முதலீடு செய்ய முதல்வர் திட்டம் ஸ்டாலின் குறித்து பழனிசாமி விமர்சனம் !!
நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த முன்னாள் முதல்வர் பழனிச்சாமி தனியார் ஹோட்டல் ஒன்றில் ஓய்வெடுத்தார் பின்னர் நேற்று காலை தஞ்சைக்கு வந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு எல்லையில் மாவட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது வல்லத்தில் 65 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியேற்றி வைத்து பழனிசாமி பேசியதாவது…
இங்கிருக்கும் கூட் டத்தை பார்க்கும்போது எதிரிகள் நமக்கு எதிரே இல்லை என்பதை காட்டுகிறது. இயக்கத்திற்கு சிலர் துரோகம் செய்தார்கள் அழிக்கவும். முடக்கவும் பார்த்தார்கள். அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டது. அதிமுகவை இனி எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு 8 மாதம் ஆகியும் எதையும் திமுக நிறைவேற்றவில்லை திராவிடமாடல் என சொல்லிக்கொண்டிருக்கும் ’பொம்மை’ முதல்வர் ஸ்டாலின் 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்.
திமுகவை பொறுத்த வரை அது குடும்ப கட்சி அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ ஒன்றில், 30 ஆயிரம் கோடியை முதல்வர் ஸ்டாலின், மருமகள் சபரீசன். மகன் உதயநிதி ஆகியோர் பெற்றிருப்பதாக தெரிவித்தார் அதை என்ன செய்வது என தெரியாமல் திகைத்துக்கொண்டு இருப்பதாக கூறினார், அந்த பணத்தை முதலீடு செய்வதற்காகத்தான் முதல்வர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.