வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டதா கவலையை விடுங்கள் …
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை ஒரு முக்கியமான ஆவணம் என்பது உங்களுக்கு தெரியும். இந்திய குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க இது ஒரு முக்கியமான அடையாளச் சான்றாகும். ஒவ்வொரு குடிமகனும் 18 வயதை அடைந்து விட்டால் , அவர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அசல் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால், வாக்களிக்க முடியாது.
சரி, அசல் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால், நகல் வாக்காளர் அடையாள அட்டைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் வீட்டில் அமர்ந்து நகல் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறலாம் தெரியுமா ?நகல் வாக்காளர் அடையாள அட்டைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தின் செயல்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…உங்கள் மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் EPIC-002 படிவத்தைப் பதிவிறக்கவும். இதற்குப் பிறகு, படிவத்தை பூர்த்தி செய்து, அதில் எஃப்ஐஆர், முகவரிச் சான்று மற்றும் ஏதேனும் அடையாளச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
நீங்கள் இந்த படிவத்துடன் தேவையான ஆவணங்களை தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். படிவத்தை சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு ஒரு குறிப்பு எண் கிடைக்கும். ஆதார் எண் மூலம் நிலையை எளிதாகச் சரிபார்க்கலாம் படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும் தேர்தல் அலுவலகத்தால் செயலாக்கப்பட்டு சரிபார்க்கப்படும்.
சரிபார்த்த பிறகு அலுவலகம் உங்களுக்குத் தெரிவிக்கும். இதன் பின், தேர்தல் அலுவலகத்திற்கு சென்று, நகல் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைன் சரி ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ?
தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.இதற்குப் பிறகு, மற்றொரு அட்டையை உருவாக்க நீங்கள் ஒரு படிவத்தை எடுக்க வேண்டும். இப்போது அந்த படிவத்தில், உங்கள் பெயர், முகவரி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பிறகு, ஆவணங்கள் படிவத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களை சரிபார்த்த பிறகு, இரண்டாவது அடையாள அட்டை வழங்கப்படும்.