விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த லாட்டரி மார்டின் மருமகனுக்கு பொறுப்பு !
லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுன் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து இருக்கிறார், கட்சியில் இணைந்த இரண்டு மணி நேரத்தில் அவருக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த தொகுதி உடன்பாட்டில் தனி தொகுதிகள் குறைவாக தந்தாலும் போதும் கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி வேண்டும் என்று திருமா அடம் பிடித்ததாக செய்திகள் கசிந்தன.
அதற்கு பிரதிபலனாக லாட்டரி மாட்டின் குடும்பத்திற்கு ஒரு எம்பி டிக்கெட் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக வாங்கி கொடுக்க வேண்டும் என்பது உடன்படிக்கை என்பதாக பேச்சு உலா வருகிறது, விசிகவுக்கான தேர்தல் வியூகங்களை அமைப்பது உள்ளிட்ட விஷயங்களையும் வெளியில் தெரியாமல் இயக்கிக் கொண்டிருப்பது ஆதவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (voice of commons) என்ற அமைப்புதான்.. பூனைக்குட்டி வெளியே வருகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.