விமான நிறுவனத்துக்கு 1.10 கோடி ரூபாய் அபராதம் !

0

வெகு தொலைவு தூரம் செல்லும் விமானங்களுக்கு, சில விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகளை, விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விதித்துள்ளது. பெங்களூரில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில், போதிய ஆக்சிஜன் இல்லாத காரணத்தால்,விமானத்தை ஓட்ட பைலட் மறுத்து விட்டார்.

logo right

மேலும் இது பற்றி விமானப்போக்குவரத்து இயக்குனரகத்திடம், பைலட் புகார் செய்தார்.புகார் தொடர்பாக, விமானப்போக்குவரத்து இயக்குனரகம், விரிவான விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு, ஏர் இந்தியா நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூபாய் ஒரு கோடியே பத்து லட்சம் அபராதம் விதித்துள்ளது விமானப்போக்குவரத்து இயக்குநரகம்.

Leave A Reply

Your email address will not be published.