விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யாததால் நாங்கள் நலமில்லை முதல்வருக்கு பதிலடி !

0

விவசாயிகள் நாங்கள் நலமாக இல்லை என்று தெரிவித்து விவசாய சங்க நிர்வாகிகள் மஞ்சள் கொம்புடன் தாலிக்கயிறு மட்டுமே உள்ளது என்று கூறி தாலி கயிற்றை அலுவலகப் பெயர் பலகையில் கட்டியும், ராக்கெட் விட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

logo right

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  நீங்கள் நலமா என்ற திட்டத்தை மார்ச் மாதம் தமிழக அரசின் சார்பில் துவக்கியுள்ளார், நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்ந்துள்ளதா, தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்று கேட்கின்றனர், நாடாளுமன்ற தேர்தல் 2019 மற்றும் சட்டமன்ற தேர்தல் 2021 ஆகிய இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சிறு குறு விவசாயிகளின் பயிர் கடன், நகை கடன், மகளிர் குழு கடன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஏதாவது ஒரு கடனை மட்டும் தான் தள்ளுபடி செய்வோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நகை கடன் தள்ளுபடி செய்தவர்களுக்கு பயிர் கடன் தள்ளுபடி இல்லை, மகளிர் குழு கடன் தள்ளுபடி இல்லை என்று தமிழக அரசு விவசாயிகளையும் மகளிர் குழுவையும் ஏமாற்றி உள்ளது என்று குற்றம் சாட்டினார், 48 லட்சம் விவசாயிகள் நகை கடன் வைத்திருந்ததில் 13 லட்சம் விவசாயிகளின் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, மீதி 35 லட்சம் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் அவர்கள் கையில் மஞ்சள் தாலிக்கயிற்றில் மஞ்சள் கொம்பும் மட்டுமே உள்ளது என்று கூறி அலுவலக பெயர் பலகையில் கயிற்றைக் கட்டி ராக்கெட்டை விட்டு 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நலமில்லை, நலமில்லை தேர்தல் அறிக்கையில் நலமில்லை என்ற கண்டன கோஷங்களை எழுப்பி நூதன முறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.