வேலூர் : பொதுத்தேர்வுப்பணியில் அலட்சியம் ! அலறவிட்ட அலைப்பேசி !

0

வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றுபவர் நேச பிரபா. இவர் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான பணிகளில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் அருள் ஒளி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

logo right

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாவட்ட அளவிலுள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தேர்வு பணிகளை மிகச்சரியாக செய்ய வேண்டும், எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும், எந்தவித முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருக்கக் கூடாது, அப்படி இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வித்துறை உயரதிகாரிகள் தொடர்பு கொண்டபோது வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா அவர் அலைப்பேசியை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார், இதுதொடர்பான புகாரின்பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.