ஸ்டாலின் பிறந்தநாளில் அருண் நேரு வேட்புமனு தாக்கல் !
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட கே.என்.அருண் நேரு சென்னையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விருப்ப மனுவை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வழங்கினார்.
அருகில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார் கதிரவன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், தொழிலதிபர் கே.என். ரவிச்சந்திரன் உள்பட பலர் உள்ளனர். மேலும் கே.என்.அருண் நேருக்காக பெரம்பலுார் தொகுதி கேட்டு 47 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர் என்பதும் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது. ஆகவே திருச்சியில் போட்டியில்லை என்பது ஒருபுறம் உறுதியாகி இருக்கிறது அதுமட்டுமல்லாமல் மதிமுகவுக்கு ரூட் கிளியர் ஆகிவிட்டது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அருணுக்கு பெரம்பலூரா திருச்சியா என்றும் மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடப்போகிறார் என்பதையும் உங்கள் விதுரன் முதன்முதலாக அப்படியாவில் சொல்லியது குறிப்பிடத்தக்கது. நேருவின் மகனே வருக ! நிலையான நல்ல ஆட்சி தருக !!