ஸ்ரீரங்கம் பெருமாளைக்காண பிரதமர் வருகை !
பிரிக்க முடியாதது எது எனக்கேட்டால் திருச்சியும் திருப்புமுனையும் என்பார்கள்..
அதற்கு பல உதாரணங்கள் உண்டு
கருணாநிதி முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டது திருச்சிமாவட்டம் குளித்தலையில் இருந்து
எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தை துவக்கி வைத்தது திருவரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பாப்பாகுறிச்சியில் இருந்து
திமுகவில் இருந்து மதிமுக பிரிந்ததற்கு அச்சாரம் போட்டது திருச்சி,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 1998ம் ஆண்டு திருச்சியில் தேர்வு செய்யப்பட்டு பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார் அரங்கராஜன் குமாரமங்கலம்.
2014ம் ஆண்டு முதன்முதலில் பாரதபிரதமராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரத்தை தொடங்கியதும் திருச்சியில் தான்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே களைகட்டத்தொடங்கிவிட்டது அதற்கு அச்சாரம் போடும் விதமாக ஜனவரி 2ம் தேதி திருச்சி வந்து விமானநிலைய முனையம் திறப்புவிழா, பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்
ஒரு பிரதமர் பாரதிதாசன் பல்கலைக்கு வருவது இதுதான் முதன் முறை இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசிக்க பிரதமர் மோடி மீண்டும் திருச்சி வருகிறார்.
19ம்தேதி சென்னையில் நடைபெறும் தமிழக அரசின் கேலோ இந்தியா விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் பின்னர் அங்கிருந்து 20ம் தேதி உச்சிப்புள்ளி கருடா விமான தளத்தில் கால்பதிக்கிறார், அதன்பின்னர் சாலை மார்க்கமாக இராமேஸ்வரம் செல்லும் பிரதமர் திருச்சி வந்து சாலை வழியாக ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கநாதரை தரிசனம் செய்கிறார், ராமரின் குலதெய்வம் அரங்கநாதர் என்பதால் ஸ்ரீரங்கம் வருவதாக சொல்லப்படுகிறது தரிசனம் முடிந்தபின் டெல்லிக்கு செல்கிறார்.
இதனையடுத்து ராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவிக்கப்பட்டுள்ளனர்.