ஹிட்லர் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

0

இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ’ஹிட்லர்’. இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…இசையமைப்பாளர் மெர்வின் பேசுகையில் நாங்கள் நாக்க முக்க பாடல் வெளியான காலத்திலிருந்து விஜய் ஆண்டனி ரசிகர்கள். இப்போது அவருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி. ஒரு நல்ல திரைப்படத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. கண்டிப்பாக இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறோம்.என்றார்

பின்னர் விவேக் பிரசன்னா பேசும்பொழுது… தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஒரு மிகச்சிறப்பான படைப்பில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி. இயக்குநர் தனா இதுவரை நான் நடித்த படத்தில் இல்லாத புதிய ரியாக்சனை இப்படத்தில் என்னிடம் கொண்டுவந்தார். தனாவிற்கு நன்றி. விஜய் ஆண்டனி சாருடன் பல காலமாக இணைந்து  நடிக்க ஆசைப்பட்டேன், இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. மக்களை அடிமைக்குள்ளாக்கினான் ஹிட்லர், இந்த ஹிட்லர் மக்களின் நன்மைக்காக அதிகாரத்தை கையில் எடுத்துள்ளான். பார்த்து ரசியுங்கள் நன்றி என்றார். இயக்குநர் தமிழ் பேசும் பொழுது.. ஹிட்லர் மிக அழுத்தமான தலைப்பு இந்தப்படத்திற்கு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் ஒரு படம் முடிந்த பிறகு எல்லோருக்கும் நன்றி சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் தனா 24 மணி நேரமும் இந்த படத்திற்காக மட்டுமே உழைத்துக் கொண்டே இருப்பார். எப்போதும் இதே சிந்தனை தான். இந்தப் படத்தில் அவருடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. பார்வையாளர்களுக்கும் இந்தப்படம் நல்ல அனுபவம் தரும் நன்றி.

logo right

நடிகை ரியா சுமன் எனக்கு இந்தப் படம் மிக முக்கியமான படம். இயக்குநர் தனா, மணி சார் ஸ்கூலிலிருந்து வந்துள்ளார். எல்லா மணிரத்னம் படங்கள் போல இந்தப்படத்தில் தனா சார் எனக்கு மிக முக்கியமான ரோல் தந்துள்ளார். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப் படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி. என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசும் பொழுது…இயக்குநர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார். ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கௌதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள். விவேக், மெர்வின்  இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் டைரக்டர் முரளி , அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.