ஹையா ஜாலி தொடர்ந்து நாலு நாள் விடுமுறை…

0

இந்த வாரம் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதால் பள்ளிச்செல்லும் பிள்ளைகள் குஷி அடைந்திருக்கிறார்கள். வருகின்ற 25ம் தேதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை தைப்பூசம் வள்ளலார் தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம், அதேபோல ஜனவரி 26ம்தேதி வெள்ளிக்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வியாழன் வெள்ளியைத்தொடர்ந்து எப்பொழுதும் போல சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து கொள்ள நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்திருக்கிறது. சரி சரி பிள்ளைகளுக்கு அடுத்த மாதம் தேர்வுகள் தொடங்கிவிடும் ஆகவே இந்த நான்கு நாட்களை பயன்படுத்திக்கொண்டு பக்கத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுங்கள், கூடவே பிள்ளைகளிடம் இப்ப கூட்டிக்கிட்டு வந்துட்டேன் தேர்விலேயும் நல்ல மார்க் எடுத்தா மீண்டும் லீவுக்கு ஒரு இடத்துக்கு கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்லி உற்சாகமாக கிளம்புங்க.

Leave A Reply

Your email address will not be published.