இணைந்தது பாஜக பாமக தொகுதிகள் நிறைவு…
கடந்த மாதம் தேதி சென்னையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், யாருடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு ஒரு மாதம் ஆன நிலையில் முடிவெடுப்பதில் பாமக காலதாமதம் செய்து வந்தது அதிமுக கூட்டணிக்கு செல்வதா பாஜவுடன் கூட்டணி அமைப்பதா என்பதில் அந்த கட்சிக்கு குழப்பம் நீடித்து வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உவி.சண்முகமும், பாஜக தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வந்தன.
இந்நிலையில், பாமக உயர்நிலைச் குழுகூட்டம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் தோட்டத்தில் நடந்தது இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி கெளரவ தலைவர் ஜி.கே.மணி பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி மற்றும் முன்னாள் எம்எல்ஏ தீரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் கூட்டத்தில் அதிமுக பாஜக கூட்டணிகளில் எந்த அணிக்கு செல்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இறுதியில், பாஜக கூட்டணிக்கு செல்வது என்று முடிவானது. இது குறித்து பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் நேற்று இரவு கூறியதாவது பாமக உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. இதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் யாருடன் கூட் டணி வைப்பது என்ற அதிகாரத்தை ராமதாசிடம் கடந்த பொதுக்குழுவில் ஒப்படைத்தோம் இதற்கான அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் எனக்கூறியிருந்த நிலையில் இன்று அதிகாலை வரை நீடித்த பேச்சு வார்த்தைக்குப்பின் பாமக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும், பாமக வேட்பாளர்கள் யார்யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடியை பாமக தலைவர் அன்புமணி சந்திக்கக் கூடும் பாஜவுடன் கூட்டணி இருக்கும். பாமகவுக்கு பயனுள்ளதாக மாவட்டச் செயலாளர்கள் ஒருமனதாக இந்த தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைக்க ஆதரவு தெரிவித்தனர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி தமிழகத்தை 60 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது நாங்கள் மட்டுமல்ல கூட்டணி தமிழகம் மட்டுல்ல இந்தியா முழுவதும் வெற்றி பெறுவார் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி தொடர்வார் என்றார். பாமக போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் போட்டியிடும் தொகுதி விபரங்களை நாளைதான் வெளியிடுவார்களாம் பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காது இல்ல…