10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கினாலும் வரியை சேமிக்க அட்டகாசமான ஆறு வழிகள் !

0

மக்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். பழைய வரி விதிப்பின்படி, ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை என்று வருமான வரி விதி கூறுகிறது. மார்ச் மாதம் வந்துவிட்டது வரிசெலுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.

அதிக வருமானம் ஈட்டும் மக்கள் வரியைச் சேமிக்கப் போராடத் சந்திக்க போகிறீர்கள். ஆனால் மத்திய அரசு புதிய வரி விதிப்பில் ரூபாய் 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரிவிலக்கு அளித்துள்ள நிலையில், பழைய வரி விதிப்பில் ரூபாய் 5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உங்கள் ஆண்டு வருமானம் இந்த இரண்டு வரம்புகளை விட அதிகமாக இருந்தால் நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

மக்கள் வரி தற்பொழுதைய வரிவித்திப்பின்படி அதிக வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். பழைய வரி விதிப்பின்படி, ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை என்று வருமான வரி விதி கூறுகிறது. 2.5-5 லட்சம் வருமானத்திற்கு 5 சதவிகித வரி விதிப்பு உள்ளது. அதேசமயம் ஆண்டு வருமானம் ரூபாய் 5 முதல் 10 லட்சம் மீது 20 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூபாய் 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 30 சதவிகிதமாக இருக்கிறது.

10.50 லட்சம் வருமானத்தில் கூட வரி சேமிக்க முடியும், இதன்படி உங்கள் ஆண்டு வருமானம் ரூபாய் 10 லட்சமாக இருந்தால் 30 சதவிகித வரி செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் விரும்பினால், ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியதில்லை. தெரியுமா உங்கள் சம்பளம் ரூபாய் 10.50 லட்சமாக இருந்தாலும், முதலீடு செய்து, விலக்குகளைப் பயன்படுத்தி, வரி முழுவதையும் சேமிக்கலாம்.

10.50 லட்சம் வருமானத்தில் வரியைச் சேமிப்பது எப்படி இப்பொழுது பார்க்கலாம் ?

1. நிலையான விலக்காக ரூபாய் 50 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும். அப்படிப்பட்ட நிலையில், இனி ரூபாய் 10 லட்சத்துக்கு வரி விதிக்கப்படும்.

logo right

2. PPF, EPF, ELSS, NSC போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ரூபாய் 1.5 லட்சம் வரியைச் சேமிக்கலாம். இப்போது ரூபாய் 10 லட்சத்தில் இருந்து ரூபாய் 1.5 லட்சத்தை கழித்தால் ரூபாய் 8.5 லட்சம் வரியின் கீழ் வரும்.

3. இதேபோல், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) நீங்கள் தனித்தனியாக ஆண்டுதோறும் ரூ. 50,000 வரை முதலீடு செய்தால், பிரிவு 80CCD (1B) இன் கீழ், கூடுதல் ரூ. 50 ஆயிரம் வருமான வரியைச் சேமிக்க உங்களுக்கு உதவி கிடைக்கும். இப்போது கூடுதலாக ரூ.50 ஆயிரத்தைக் கழித்தால் ரூ.8 லட்சம் வரி வரம்பிற்குள் வரும்.

4. வீட்டுக் கடனையும் சேர்த்துக்கொள்வோமா, வருமான வரியின் 24பி பிரிவின் கீழ் அதன் வட்டியில் ரூபாய் 2 லட்சம் வரை வரிச் சேமிப்பு செய்யலாம். ரூபாய் 8 லட்சத்தில் இருந்து மேலும் ரூபாய் 2 லட்சத்தை கழித்தால் மொத்த வரி வருமானம் ரூபாய் 6 லட்சம் சரிதானே

5. வருமான வரியின் 80டி பிரிவின் கீழ் மருத்துவ பாலிசி எடுப்பதன் மூலம் ரூபாய் 25 ஆயிரம் வரை வரியைச் சேமிக்கலாம். இந்த உடல்நலக் காப்பீட்டில் உங்கள் பெயர், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்கள் இருக்க வேண்டும். இது தவிர உங்கள் பெற்றோர் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்கினால் ரூபாய் 50,000 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இந்நிலையில் ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 75 ஆயிரத்தை கழித்தால் மொத்த வரிப்பணம் ரூபாய் 5.25 லட்சமாக இருக்கும்.

6. நீங்கள் எந்த ஒரு அங்கீகாரம் பெற்ற மையங்களுக்கு நன்கொடை அளித்தால், ரூபாய் 25,000 வரை வரிச் சலுகையைப் பெறலாம். வருமான வரியின் 80ஜி பிரிவின் கீழ், நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட தொகைக்கு ரூபாய் 25,000 வரை வரி விலக்கு கோரலாம். ரூபாய் 25 ஆயிரத்தை கழித்தால், உங்கள் வருமானம் ரூபாய் 5 லட்சம் வரி அடுக்குக்குள் வரும்.

வருமான வரி விதிகளின்படி, 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு பழைய வரி முறையின் கீழ் வரி செலுத்த வேண்டியதில்லை.

Leave A Reply

Your email address will not be published.