100 சதவிகித வாக்குப்பதிவு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் !

0

வேலூர் நகரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி மேலவீதி, வடக்குவீதி, அண்ணா சாலையை தொடர்ந்து தொரப்பாடி எம்ஜிஆர் சிலை முடிவடைந்தது. இதனை புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ சி எஸ் சண்முகம் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

logo right

மினி மாரத்தான் ஓட்டப்பந்தியும் சுமார் 6 கிமீ தூரம் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து தொடர் ஓட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு புதிய நீதி கட்சியின் சார்பில் ஏ சி சண்முகம் எம்ஜிஆர் சிலை அருகில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் மூன்று இடங்களில் வந்த இளைஞர்களுக்கு ரொக்கம், 30,000 இரண்டாம் பரிசாக 20,000 மூன்றாம் பரிசாக 10,000 கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.