15 மாநிலங்கள் 56 இடங்கள் ராஜ்யசபா தேர்தல் !
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்வு செய்யப்பட்ட 56 எம்பிக்களின் பதவிக்காலம் 2024 ஏப்ரல் மாதத்தில் நிறைவடைகிறது. இதனால், அந்த இடங்களுக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிவிப் பில் கூறியதாவது…
அரியானா , இமாச்சல் , மத்தியப் பிரதேசம் , மகா ராஷ்டிரா , தெலுங்கானா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்த 50 ராஜ்யசபா எம்பிக் களின் பதவிக்காலம் 2024 ஏப்ரல் 2ம் தேதியும், ஒடிஷா , ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் 2024 ஏப்ரல் 3ம் தேதியும் நிறைவு பெறுகிறது.
காலியாகும் 56 இடங்களுக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16ம் தேதி நடத்தப்படும். வேட்புமனு. வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி 20ம் தேதி ஆகும்.
பிப்ரவரி 27ம் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மாநில சட்ட சபைகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவு அறி விக்கப்படும். தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கும் வயலட் கலர் ஸ்கெட்ச் பேனா கொண்டு மட்டுமே ஓட்டுச் சீட்டில் எம்எல்ஏக்கள் குறியிட வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் வேறு பேனா பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.