25ம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் எழில் !
விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித்தின் ‘பூவெல்லாம் உன்வாசம்’, ஜெயம் ரவியின் ‘தீபாவளி’ படங்களை இயக்கியவர் எழில். சினிமாவில் இவர் 25வது ஆண்டை தொட்டுள்ளார். இதற்கான விழா சென்னையில் வரும் 27ம் தேதி நடக்கிறது. எழில் இயக்கிவரும் ‘தேசிங்குராஜா’ படக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
‘துள்ளாத மனமும் துள்ளும்’ கிளைமாக்ஸ் குறித்து இப்போது கூட வியப்பாக பேசுகிறார்கள். விஜய், சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவ்வளவு எமோஷனல். அதே போல், ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்துக்காக போடப் பட்ட இரட்டை வீடு செட், ‘திருமண மலர்கள் தருவாயா’ பாடல் பிரபலம். ‘தீபாவளி’ படத்தில் இடம் பெற்ற ‘கண் ணன் வரும் வேளை’ பாடலும் ஹிட். இந்த பாடல்கள் வெற்றி பெற வித்யாசாகர், இமான் போன்ற இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களே காரணம்.
ஒரு கட்டத்தில் நான் காமெடி படங்களுக்கு திரும்பினேன். ‘வேலைன்னு வந்திட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா புருஷன் காமெடி வெடிசிரிப்பை வரவழைத்தது. ‘தேசிங்குராஜா’ படத்திலும் காமெடி துாக்கல். இப்போது விமல் நடிக்க ‘தேசிங்குராஜா 2’ படத்தை இயக்கி வருகிறேன். இந்த விழாவில் அந்த பட பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. என் படங்களில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். என்னை இயக்குனர் ஆக்கிய ஆர்.பி.சவுத்ரி விழாவை தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.