மலையாள மக்கள் மனதில் இடம்பிடித்த அரசியல் தலைவர் !
இருபது மக்களவை தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினம் துவங்கியது. வரும் ஏப்ரல் நான்காம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடது முன்னனி வேட்பாளர் நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியிலும் பா.ஜ.க.வேட்பாளர் அஸ்வினி காசர்கோட்டிலும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். ராகுல் காந்தி, சுரேஷ் கோபி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த முறையும் கேரளாவில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் இடையே தான் கடும் மும்முனைப் போட்டி நடைபெறுகிறது.
அவர்களில் சில முக்கியமானவர்கள் குறித்து பார்ப்போம்…
முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா வடகரா தொகுதியில் சி.பி.எம்.கட்சி சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கும் ஷாஃபி பறம்பில், பா.ஜ.க. களமிறக்கிய பிரபுல் கிருஷ்ணா ஆகியோர் இவரது எதிர்ப்பாளர்களாக களமிறங்குகிறார்கள்.
பிரதமர் மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் சுரேஷ் கோபி தான் திருச்சூர் தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் . இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கே.முரளிதரனும் இடது முன்னணி சார்பில் முன்னாள் அமைச்சர் வி.எஸ். சுனில் குமாரும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கே.சுதாகரன் கண்ணூர் தொகுதியில் போட்டியிட, அவரை எதிர்த்து இடதுசாரிகள் சார்பில் எம்.வி.ஜெயராஜனும் பா.ஜ.க.சார்பில் சி. ரகுநாத்தும் போட்டியிடுகிறார்கள். இவர் சமீபத்தில் காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சசி தரூர் கடந்த முறை போட்டியிட்ட திருவனந்தபுரத்தில் இருந்து இம்முறையும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட, பா.ஜ.க. சார்பில் களமிறங்குகிறார் மத்திய அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர். இடது முன்னணி சார்பில் இங்கு பன்னியன் ரவீந்திரன் போட்டியிடுகிறார்.
ராகுல் காந்தி ஐக்கிய முன்னணி வேட்பாளராக வயநாடு தொகுதியில் போட்டியிட, அவரை எதிர்கொள்வது பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன். இடது முன்னணி சார்பில் களமிறங்குவது சி.பி.ஐ.கட்சியின் அகில இந்திய தலைவரான டி.ராஜாவின் மனைவியும் கேரளாவைச் சேர்ந்தவருமான ஆனி ராஜா. மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் பா.ஜ.க.சார்பில் போட்டியிடுவது ஆட்டிங்கல் தொகுதியில் . இவரை எதிர்த்து போட்டியில் இருப்பவர்கள் காங்கிரஸ் சார்பில் அடூர் பிரகாஷ் மற்றும் இடதுசாரி சார்பில் வி.ஜாய் ஆகியோர். நடிகர் முகேஷ், இடது முன்னணி சார்பில் போட்டியிடுவது கொல்லம் தொகுதியில் . இவருக்கு போட்டி ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பிரேமசந்திரன் மற்றும் பா.ஜ.க.வேட்பாளர் நடிகர் கிருஷ்ணகுமார் ஆகியோர்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியில் போட்டியிட, அவருக்கு டஃப் கொடுப்பவர் பா.ஜ.க.வின் சோபா சுரேந்திரன். இடது முன்னணி சார்பில் சிட்டிங் எம்.பி.யான எம்.எம்.ஆரிஃப் மீண்டும் களம் காண்கிறார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பா.ஜ.க.விற்கு தாவிய சில மாதங்களில் வந்திருக்கும் இத்தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் சீட் வழங்கப்பட்டி குக்கிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் ஆன்டோ ஆன்டனியும் இடதுசாரிகள் சார்பில் தாமஸ் ஐசக்கும் போட்டியிடுகின்றனர்.
தெற்கிலிருந்து தன்னுடைய கணக்கை எப்படியாவது இம்முறை தொடங்கிவிட வேண்டும் என பாஜக பகீரதன முயற்சி மேற்கொடு வருகிறது, தமிழகத்தைப்போலவே கேரளாவிற்கு ஒருமுறையோ இரு முறையோ மீண்டும் மேற்கொள்வார் என்கிறார்கள் பாஜகவினர், அது சரி ஒரு சீட்டோ இரு சீட்டோ கிடைக்குமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் ஆனால் இம்முறை போட்டி சற்றே கடினமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.