பழனி அருகே பற்றியெறிந்த கார்… பயணிகள் ஓட்டம் !
பொள்ளாச்சியில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா செல்லுவதற்காக ஆறு பேர் பழனி வழியாக கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்த போது கொடைக்கானல் சாலையில் கோம்பைகாடு என்ற இடத்தில் எஞ்ஜினில் இருந்து புகை வந்தது உடனடியாக காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி பார்க்க போது கார் முழுவதும் தீ பரவியது.
அங்கிருந்தவர்கள் பழனி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் செல்வதற்குள் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. புகை வந்தபோது அனைவரும் கீழே இறங்கியதால் ஆறு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.
கொடைக்கானல் சாலை கோம்பைகாடு பகுதியில் கார் தீ பிடித்து முழுவதுமாக எரிந்தது அதிர்ஷ்டவசமாக ஆறு பேர் உயிர் தப்பினர் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.