திருச்சியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 69 அரசியல் கட்சிகளை சேர்ந்த 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் வருமாறு:

ஜனநாயக பாதுகாப்பு கழகம் 2, அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி 1, அதிமுக 34, ஜனநாயக மக்கள் கழகம் 1, மக்கள் மேம்பாட்டு கட்சி 1, உழவர் உழைப்பாளர் கட்சி 1. இளைஞர் மேம் பாட்டு கட்சி 2, இந்திய அம்பேத்கரிய கட்சி 2, அமமுக 2, அனைத்திந்திய மக்கள் கட்சி 1. அம்மா மக்கள் கட்சி 1, அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் 5, அண்ணா எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் 2 ஊழலுக்கு எதிரான கட்சி 4, அறவோர் முன்னேற்ற கழகம் 5, பகுஜன் திராவிட கட்சி 6, பகுஜன் சமாஜ் கட்சி 39. பாஜக 23, பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி 5, சென்னை இளைஞர் கட்சி 2.

 

இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் 2, தேசிய மக்கள் சக்தி கட்சி 9, தேமுதிக 5, தேசிய மக்கள் கழகம் 2, திமுக 22, இந்திய கனசங்கம் கட்சி 7, ஹர்தம் மானவ்தவாதி ராஷ்ட் ரீய தள் 1. இந்து சமாஜ் கட்சி 1, இந்துஸ்தான், ஜனதா கட்சி 1. அமைதிக்கான மனித இன கட்சி 1, சுயேட் சைகள் 609, காங்கிரஸ் 9. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, ஜெபமணி ஜனதா 2,கருநாடு கட்சி 1, மகாத்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2, மக்கள் நல கழகம் 1. மக்கள் நல்வாழ்வுக் கழகம்

logo right

மதிமுக 1. நாடாளும் மக்கன் கட்சி 12.நாம் இந்தியர் கட்சி 1, நாம் தமிழர் தமிழர் கட்சி 39. நம் இந்தியா நாம் 1. தேசிய மகா சபா கட்சி 1, புதிய தலைமுறை மக்கள் கட்சி 1, பாமக 10, புன்னகை தேசம் கட்சி 1, புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி 3, ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா 2. இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) 1, சாமானிய மக்கள் நல கட்சி 9. இந்திய சோஷலிச ஐக்கிய மையம் (கம்யூனிஸ்ட்) 2, தமாகா 3, தமிழ் மாநில முற்போக்கு திராவிடர் கழகம் 2, தமிழக மக்கள் நல கட்சி 1, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி 2, தமிழர் மக்கள் கட்சி 2, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு பேரியக்கம் 1, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி 3. தாக்கம் கட்சி 6, திப்பு சுல்தான் கட்சி 1, உழைப் பாளி மக்கள் கட்சி 3, இந்திய ஐக்கிய குடியரசு கட்சி 5, வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலா ளர்கள் கட்சி 9, விடியல் தேடும் இந்தியர்கள் கட்சி 1, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, விடுதலை களம் கட்சி 1, வீரோ கே வீர் இந்தியன் கட்சி 6 என மொத்தம் 69 கட்சிகளை சேர்ந்த 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாபா என்ன இப்பவே கண்ணை கட்டுதா !

 

அதுசரி நம்ம திருச்சி வேட்பாளர்கள் விபரத்தை பார்ப்போமா !

திருச்சி நாடாளுமன்ற தொகுதி திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு,  ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்,  புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது இதில் 15,44,742 வாக்காளர்கள் உள்ளனர்  மூன்றாம் பாலினத்தவர்கள்  241. மொத்தமாக 35 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர், முக்கிய வேட்பாளர்களாக திமுக கூட்டணி சார்பாக துரை வைகோவும், அதிமுக சார்பில் கருப்பையாவும், பாஜக கூட்டணி சார்பில் செந்தில்நாதனும் நாம் தமிழர் சார்பில் ஜல்லிக்கட்டு பேரவை என நடத்தி வரும் ராஜேஷ்ம் போட்டியிடுகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.