நாற்காலிக்கு சண்டை போட்ட ரத்தத்தின் ரத்தங்கள் !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் . இக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பித்த நேரத்தில் இருக்கைகள் இல்லாததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே மின்சாரமும் போனதால் சிறிது நேரம் சலசலப்பு நீடித்தது. வேட்பாளருக்கு சால்வை அணிவிக்க வந்த தேமுதிக நகர செயலாளரிடம் இருந்து சால்வையை பிடிங்கி நத்தம் விஸ்வநாதன் கடிந்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
அறிமுக கூட்டத்தில் வேட்பாளர் செல்போனில் மூழ்கியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது . தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன் நமக்கு அரசியல் எதிரியாக எப்பொழுதுமே இருப்பது திமுக தான் எனவும் ஆனால் தற்போது இந்த தேர்தலில் பிஜேபி என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் இந்தத்தேர்தலில் இரண்டு முதலைகளை எதிர்த்து நிற்கிறோம் 2011ல் ஏற்பட்ட நிகழ்வு 2024ல் ஏற்பட வேண்டும் எனவும் அதிமுக தனிக்காட்டு ராஜா நரேந்திர மோடியுடன் சென்று விட்டீர்கள் எங்களிடம் ஓட்டு கேட்காதீர்கள் என்று சிறுபான்மையினர் கேட்டுக் கொண்டதால் கூட்டணி விலகினோம் இஸ்லாமிய கிறிஸ்துவ சிறுபான்மை மக்களுடன் தான் நாங்கள் உள்ளோம் இஸ்லாமிய சமூகத்திற்கு ஒரு எம்பி வேண்டும் என முபாரக்கை தேர்ந்தெடுத்தோம் இரண்டு அப்பாக்களிடம் மகனாக அவரை எங்கள் பொதுச் செயலாளர் ஒப்படைத்து விட்டார் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர் பேசும் போது உணர்ச்சி வசப்பட்டதால் நான் அழுதேன். நான் ஒன்றும் பிச்சை எடுக்கவில்லை நடிப்பவர்களுக்கு தான் விளம்பர வேண்டும் எங்களுக்கு தேவையில்லை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்த திண்டுக்கல் சீனிவாசன் பல்வேறு இடங்களில் உளறல்கள் பலசரக்கு மற்றும் சிமெண்ட் விலை பொருட்களை கேட்டு சிரிப்பலைகளையும் ஏற்படுத்தினார்.
SDPI கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் பேசுகையில் அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே என்று பாட்டு பாடி தன்னை அதிக அளவில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் நல திட்டங்கள் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் பேசினார் .
Comments are closed, but trackbacks and pingbacks are open.