நாலே நாலு நாடே நம் கையில் பாஜக !

0

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புக்களும் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனக்கூறியுள்ளதுடன் அசுர பலத்துடன் ஆட்சியை அமைக்கும் எனத்தெரிவிக்கின்றன.

மாநிலங்கள் அவையின் மொத்த பலம் 245. இதில், 233 உறுப்பினர்கள் எம் எல்ஏக்களால் தேர்தெடுக்கப்படுவர்கள். 12 பேர் நியமனம் செய்யப்படுவார்கள், ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்டதால், மக்களவையில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இடமும், ஒரு நியமன எம்பி இடமும் குறைந்தது. இதனால், ராஜ்யசபாவின் தற்போதைய பலம், 240 ஆக உள்ளது.

இந்நிலையில், மக்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்: 41 பேரில் பாஜவை சேர்ந்தவர்கள் 20 பேர் மீதியுள்ள 15 இடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் கர்நாடகாவில் 4, உத்தர பிரதேசத்தில் 10, இமாச்சல பிரதேசத்தில் 1 என, 15 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

உத்தரப்பிரதேசத்தில் மொத் தமுள்ள 10 இடங்களுக்கு பாஜக சார்பில் 8 வேட்பாளர்கள், சமாஜ் வாடி கட்சி சார்பில் 3 வேட்பா ளர்கள் என 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 7 பாஜக வேட்பாளர்களும், 3 சமாஜ் வாடி கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெறும் நிலையில் அவற்றின் எம்எல்ஏக்கள் பலம் இருந்தது.

logo right

எனினும், சமாஜ்வாடி கட்சியின் 7 எம்எல்ஏக்கள், பாரதிய சமாஜ் கட்சியின் ஒரு எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆகியோர் கட்சி கொறடா உத்தரவுக்கு எதிராக கட்சி மாறி வாக்களித்ததை தொடர்ந்து, பாஜக வேட்பாளர்கள் 8 பேர் வெற்றி பெற்றனர். சமாஜ் வாடி நிறுத்திய 3 வேட்பாளர்களில், இருவர் வெற்றி பெற்றனர். ஒருவர் தோல்வி அடைந்தார்.

கர்நாடகாவில் 1, உத்தரபிர தேசத்தில் 8 இமாச்சலில் 1 என. 10 இடங்களை பாஜக கைப்பற்றியது.

இதையடுத்து, மக்களவையில் பாஜகவின் பலம் 97 ஆக உயர்ந்துள்ளது. 56 புதிய உறுப்பினர்களும் பதவியேற்ற பின், மக்களவையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 117 ஆக உயரும்.

மக்களவையில் பெரும்பான்மைக்கு 121 இடங்கள் தேவை. அதனால் பெரும்பான்மை பலம் பெற. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் 4 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்படும் ஆக ஆக நாலும் நமதே நாடும் நமதே என பாஜக மார்தட்டும் காலம் கனிந்து கொண்டு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். நாடாளுமன்றத்தை தொடர்ந்து மக்களவையையும் பாஜக முழுமையாக தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்துவிடும் போல !

Leave A Reply

Your email address will not be published.