பாஜகவுடன் கூட்டணி ! இன்று அறிவிக்கிறார் வாசன்…
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவா ? பாஜகவா? எந்த கூட்டணிக்கு செல்வது என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை, தமாகா பொதுக்குழு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு வழங்கியது. அவர் தீவிர ஆலோசனைக்கு பிறகு, பாஜக கூட்டணியில் இணைவது என்று முடிவு செய்திருக்கிறார்.
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், ஜி.கே.வாசனை நேற்று இரவு சந்தித்து பேசினார், பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசன் மூன்று தொகுதிகளை கேட்கிறார்.
ஜி.கே.வாசனுடன் நீண்ட காலமாக பயணிக்கும் என். டி.எஸ்.சார்லஸ் என்பவருக்காக திருநெல்வேலி, யுவராஜாவுக்காக திருப்பூர், என்.ஆர்.நடராஜனுக்காக மயிலாடுதுறை தொகுதியை கேட்டிருப்பதாக கூறப்படு கிறது.
கூட்டணி தொடர்பான அறிவிப்பை தமாகா தலைவர் ஜி. கே.வாசன் இன்று காலை சென்னையில் அறிவிக்கிறார். பிரதமர் மோடி 27ம் தேதி தமிழகம் வருகிறார். அவரை சந்திக்கும் கூட்டணிக்கட்சி தலைவர்களில் ஜி.கே.வாசனும் இருப்பார் என்று கூறப்படுகிறது.