திருச்சி : கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்…
100சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்.
நாடாளுமன்றத்தேர்தல் தமிழகத்தில் ஒரேகட்டமாக வருகிற ஏப்ரல் 19ம்தேதியன்று நடைபெறுகிறது, தேர்தல் திருவிழா தொடங்கியநிலையில் திருச்சியில் அனைத்து வாக்காளர்களும் தவறாது தங்களது ஜனநாயக கடமையினை செலுத்தி 100சதவீத வாக்களிப்பை உறுதிசெய்யவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்விதமாக விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். திருச்சி அண்ணாநகர் சாலையிலிருந்து அண்ணாவிளையாட்டரங்கம் வரையிலான 5கிமீ தொலைவிலான மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.