அண்ணாமலைக்கு ஆசிர்வாதம் ! திருப்பூர் திகைப்பு !!
பாஜகவை வலுப்படுத்த தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்னும் பெயரில் யாத்திரை மேற்கொண்டார் அதில் கடைசி தொகுதியாக நேற்று பல்லடத்தில் நிறைவு செய்தார், அதனைத்தொடர்ந்து நேற்றைய நிறைவு நாளில் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பாரதப்பிரதமர் மோடி ஆகியோர் நிறைவு விழாவில் கலந்து கொண்டனர் இன்னும் சொல்லப்போனால் அவர்கள் நேற்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதாகவே தெரிந்தது.
என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது…தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் தான் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது, பாஜக தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது, 2024ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சியாக பாஜக இருக்கிறது.
தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள். ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழ்நாட்டை புதிய பாதையில் எடுத்துச் செல்கிறது,
தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள், தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது, மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபொழுதும் தமிழ்நாட்டிற்கு திமுக எதுவும் செய்யவில்லை.
தமிழ்நாட்டிற்கு மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவருகிறோம், இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன், எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார், எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே.
தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது. 2024ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
விழாத்துளிகள் :
பிரதமருக்காக காளை மாடு நினைவுச்சின்னமாக காளை மாடு சிலை வழங்கப்பட்டது, அந்த ஏரியாவின் பயிரான மஞ்சள்லால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது.
அண்ணாமலையை தோளில் தட்டிக்கொடுத்தும் உச்சி முகர்ந்தும் பாராட்டினார்.
பல்வேறு கட்சியைச்சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் பாஜகவில் இணைவார்கள் எனக்கூறப்பட்ட நிலையில் ஒருவர் தலையையும் காணவில்லை
கூட்டணிக்கட்சியில் தற்பொழுது இருக்கும் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உளவுத்துறையின் கணக்குப்படி கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக நமக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள்.