திண்டுக்கல் : பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல். 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை திடீர் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பேருந்து மற்றும் வாகனங்கள் மற்றும் ரயிலில் பழனி முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
இந்நிலையில் இன்று பழனி ரயில் நிலையத்தில் திடீரென்று 50க்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸ் மற்றும் பழனி நகர போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் இணைந்து பழனி ரயில் நிலையத்தில் திடீர் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள் மற்றும் குப்பை தொட்டி கடைகள் ரயில்வே தண்டவாளம் என அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
இந்தச் சோதனையானது பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு மின்னணு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அதன் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருவதாகவும் இச்சொதனையில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி, ஆர் பி எப் இன்ஸ்பெக்டர் சுனில் குமார், பழனி நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த வெடிகுண்டு சோதனையானது பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஐஜி ரகசிய தகவல் கிடைத்ததாகவும், மற்றும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இச்சோதனை செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரம் பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.